கஞ்சா வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக்கூடாது - ஜோ பைடன் ..
சிறிய அளவிலான கஞ்சாவை வைத்திருந்ததாக அமெரிக்காகர்களுக்கு அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு வழங்கியுள்ளார். கஞ்சா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பல்வேறு மாநில ஆளுநர்களுக்கு அவர் உத்த்ரவிட்டுள்ளார் . அதன் கீழ் குற்றவியல் தண்டனைகளை குறைப்பதாக அல்லது நீங்குவதாக பைடன் கூறினார் .
சிறிய அளவிலான கஞ்சாவைப் பயன்பத்திற்க்காகவும்,வைத்திருந்திற்காகவும் பலர் வேலை மற்றும் கல்வியை இழந்திருக்கும் நேரத்தில் பைடனின் அறிவிப்பு வந்துள்ளது .கஞ்சா வைத்திருந்திற்காக யாரும் சிறைக்கு செல்ல வேண்டாம் என்றும், இதனால் பலரின் உயிர்கள் சீரழிந்துள்ளதாகவும், தவுறுகை சரி செய்ய வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார் .
இருப்ப்பினும், பெரிய அளவிலான கஞ்சா கடத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் சிறார்களுக்கு விற்பனை செய்த்தில் ஆகியவற்றில் விதிவிலக்குகள் இருக்காது என்று பைடன் அறிவித்தார். 2019 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 18 சதவீதம் மக்கள் கஞ்சாவை பயன்படுத்தியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில மாநிலங்கள் பொழுதுபோக்கு அல்லது மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை பயன்படுவதை சட்டபூர்வமாக்கியுள்ளது.
0 Comments