சங்ககிரி அருகே அரசிராமணி பகுதியில் 1 ஏக்கர் 60 சென்ட் அரசு தரிசு நிலம் மீட்பு .
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பிட் 1 வேட்டைக்காரன் காடு பகுதியில் அரசு தரிசு மற்றும் வண்டி பாதை புறம்போக்கு நிலத்தினை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளனர், இதனால் வெள்ளரிவெள்ளி ஏரியல் இருந்து வெளியேறி வரும் உபரிநீர் பாதை அடைக்கப்பட்டு தண்ணீர் மழை காலங்களில் விவசாய வயல்களில் சென்று பயிர்களை சேதப்படுத்தி வந்தது, இதுகுறித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற கோரிக்கை விடுத்தனர், இதன்பேரில் சங்ககிரி வட்டாட்சியர் பானுமதி தலைமையில் தேவூர் வருவதை ஆய்வாளர் கலைச்செல்வி கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன் , கிராம உதவியாளர் இயேசு , மற்றும் அரசிராமணி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிமுத்து, ஆகியவர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 1 ஏக்கர் 60 சென்ட் நிலங்களை அகற்றி மீட்டெடுத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

0 Comments