இந்தியன் 2 படத்தில் இவர்தான் வில்லனா? சர்ப்ரைஸை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

இந்தியன் 2 படத்தில் இவர்தான் வில்லனா? சர்ப்ரைஸை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!



சுமார் 25 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். உலக நாயகன் என அழைக்கப்படும் கமல் ஹாசன் தந்தை மகன் இரண்டு வேடங்களில் இப்படத்தில் கலக்கியிருந்தார். கவுண்டமனி, செந்தில், கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகமான இந்தியான்-2 இப்போது படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்திலும் தாத்தா கமலே ஹீரோ. மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரும் இந்த படத்தில் கமலுடன் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். 

வெவ்வேறு இடங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பு..


பல லட்சம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படம், உலகின் பல்வேறு பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பீகார், தென் ஆப்ரிக்கா, தைவான் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்ற படப்பிடிப்பானது தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதுவும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஆகையால், இந்த வருடமே ஷங்கர் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்தான் வில்லனா? 


இயக்குநராக சினிமாவிற்குள் அறிமுகமாகி, இப்போது நடிப்பிலும் கலக்கி கொண்டிருப்பவர், எஸ்.ஜே.சூர்யா. இவர்தான் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடித்துவருவதாக பேச்சு அடிபடுகிறது. எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்து கேட்கப்பட்டது. அவர், தான் நடித்துள்ள படங்களையெல்லாம் கூறிவிட்டு, “ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடிக்கிறேன்” என்று சொன்னார். அவர் நடிப்பதாக கூறிய படங்கள் எல்லாமே பெரிய படங்கள். ஆனால் அவரது லிஸ்டில் இல்லாத பெரிய படம், இந்தியன் 2தான். இதனால்தான் இவர் இந்தியன் 2 படத்தின் வில்லன் என்று பல நெட்டிசன்கள் தகவல்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஒரு சிலர், இந்த கதாப்பாத்திரத்தை படக்குழுவினர் சர்ப்ரைஸாக வைத்திருந்ததாகவும் அதை எஸ்.ஜே.சூர்யா உடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

எஸ்.ஜே.சூர்யாவின் படங்கள்..


தனது ஆரம்ப காலங்களில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா பின்பு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். சில வருடங்கள் கழித்து வில்லனாகவும் களமிறங்கினார். ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாகவும், மெர்சல் படத்தில் மருத்துவ வில்லனாகவும், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பேய் துரத்தும் வில்லனாகவும் நடித்து கலக்கினார். இதனால், இவரை தேடி குணச்சித்திர கதாப்பாத்திரங்களை விட வில்லன் கதாப்பாத்திரங்களே அதிகம் வந்தன. வாரிசு படத்தில் கெளரவ தாேற்றத்தில் வந்திருந்தார். இந்த ஆண்டு மட்டும் பல படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளன. பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் இவர் வில்லனாக நடித்துள்ளார். அனைத்துமே இந்த வருடத்திற்குள் வெளியாகவுள்ள படங்கள் என கூறப்படுகிறது. 






Post a Comment

0 Comments