சீறிப்பாய்ந்த காளை ...ஓட்டம் பிடித்த மக்கள்




சீறிப்பாய்ந்த காளை ...ஓட்டம் பிடித்த மக்கள் 


                கர்நாடக மாநிலத்தில் நடைப்பெற்ற எருது விடும் திருவிழாவில் காளை ஒன்று சீறிப்பாய்ந்து வேடிக்கை பார்க்க வந்தவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் ஒரு காளை சீறிப்பாய்ந்து வேடிக்கை பார்க்க வந்தவர்கள்  அனைவரும் கடுமையாக தாக்கியது.இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், காளை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்த அனைவரும் ஓட்டம் பிடித்ததால் நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments